search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அஜய் தாகூர்"

    தமிழகத்தை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரரான சரத்கமல் மற்றும் கம்பீர், அஜய் தாகூர் உள்பட 8 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. #PadmaShri #GautamGambhir
    புதுடெல்லி:

    மத்திய அரசு நேற்றிரவு அறிவித்த பத்ம விருது பெறுவோர் பட்டியலில் 9 விளையாட்டு பிரபலங்களும் இடம் பெற்று இருக்கிறார்கள். காமன்வெல்த் விளையாட்டில் 3 பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரரான சரத்கமல் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வாகியுள்ளார்.

    இதே போல் இரண்டு உலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்தவரான கவுதம் கம்பீர், இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி, கபடி அணியின் கேப்டன் அஜய் தாகூர், செஸ் வீராங்கனை ஹரிகா, வில்வித்தை மங்கை பம்பைய்லா தேவி, கூடைப்பந்து வீராங்கனை பிரசாந்தி சிங், மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா ஆகியோரும் பத்மஸ்ரீ விருது பெறுகிறார்கள். மலையேற்றத்தில் பல சாதனைகள் படைத்திருக்கும் உத்தரகாண்டை சேர்ந்த வீராங்கனை பச்சேந்திரி பாலுக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்படுகிறது. #PadmaShri #GautamGambhir
    புனேரி பல்டான் அணியுடனான நேற்றைய ஆட்டத்தில் 12 பாயிண்டுகளை எடுத்ததன் மூலம் அஜய்தாகூர் புரோ கபடி சீசனில் ரைடு மூலம் 600 புள்ளிகளை தொட்டு முத்திரை பதித்தார். #ProKabaddi2018 #AjayThakur
    புனே:

    அஜய் தாகூர் தலைமையிலான தமிழ் தலைவாஸ் அணி 7-வது ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் புனேரி பல்டானை நேற்று எதிர்கொண்டது.

    இதில் தமிழ் தலைவாஸ் அணி 36-31 என்ற புள்ளிக்கணக்கில் புனேயை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது. தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அஜய் தாகூர் அபாரமாக விளையாடி ரைடு மூலம் 12 புள்ளிகளை குவித்து வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.

    இதேபோல அனுபவம் வாய்ந்த ஜஸ்வர்சிங்கும் தனது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தினார். அவர் 8 புள்ளிகள் எடுத்தார். வீரர்களை மடக்கி பிடிப்பதில் மஞ்சித் சில்லார் நன்றாக செயல்பட்டார்.

    இந்தப்போட்டியில் 12 பாயிண்டுகளை எடுத்ததன் மூலம் அஜய்தாகூர் புரோ கபடி சீசனில் ரைடு மூலம் 600 புள்ளிகளை தொட்டு முத்திரை பதித்தார். அவர் 87 ஆட்டத்தில் 609 ரைடு புள்ளிகளை எடுத்து 3-வது இடத்தில் உள்ளார். ராகுல் சவுத்ரி 700 புள்ளிகளும், பர்தீப் நர்வால் 671 புள்ளிகளும் ரைடு மூலம் எடுத்தனர்.

    ஒட்டு மொத்தமாக டேக்கிள் பாயண்டையும் சேர்த்து 630 புள்ளிகளை பெற்றுள்ளார். இந்த சீசனில் அவர் ரைடு மூலம் 81 புள்ளிகளை பெற்று 3-வது இடத்தில் உள்ளார்.

    தமிழ்தலைவாஸ் அணி 2 வெற்றி, 5 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று ‘பி’ பிரிவில் 3-வது இடத்தில் இருக்கிறது.அந்த அணி 8-வது ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் உள்ள குஜராத் பார்ச்சுன் ஜெய்ன்ட்சுடன் வருகிற 26-ந்தேதி மோதுகிறது.

    இன்று நடைபெறும் ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ்- அரியானா ஸ்டீலாஸ் (இரவு 8 மணி), புனேரி பில்டான்- உ.பி.யோதா (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன. #ProKabaddi2018 #AjayThakur
    புரோ கபடி லீக் சீசன் 6-ல் தமிழ் தலைவாஸ் இன்றைய 4-வது ஆட்டத்தில் பெங்களூரை புல்சை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெறுமா? என ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்க்கிறார்கள். #ProKabaddi
    6-வது புரோ கபடி ‘லீக்’ போட்டி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. அஜய் தாகூர் தலைமையிலான தமிழ் தலைவாஸ் அணி ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் 42-26 என்ற புள்ளிக் கணக்கில் நடப்பு சாம்பியன் பாட்னா பைரேட்சை வீழ்த்தியது.

    அதை தொடர்ந்து நடந்த ஆட்டங்களில் தமிழ் தலைவாஸ் அணி 32-37 என்ற கணக்கில் உபி யோதாவிடமும், 28-33 என்ற கணக்கில் தெலுங்கு டைட்டன்சிடமும் போராடி தோற்றது.

    தமிழ் தலைவாஸ் அணி 4-வது லீக் ஆட்டத்தில் இன்று பெங்களூர் புல்சை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் இரவு 9 மணிக்கு தொடங்குகிறது.

    தொடர்ந்து 2 போட்டிகளில் வீழ்ந்த தமிழ் தலைவாஸ் ‘ஹாட்ரிக்‘ தோல்வியை தவிர்த்து 2-வது வெற்றியை பெறுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். உபி-யிடமும், தெலுங்கு டைட்டன்சிடமும் கடுமையாக போராடியே தோற்றது. கடைசி கட்டங்களில் செய்யும் தவறு பாதகமாகி விடுகிறது.



    அஜய் தாகூரை அதிகமாக நம்பி அணி இருக்கிறது. அவர் ஆட்டம் இழந்தால் அணியின் நிலைமை மாறி விடுகிறது. மோசமாக விளையாடும் ஜஸ்பீர்சிங் இன்றைய ஆட்டத்திலாவது மாற்றம் செய்யப்படுவாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரெய்டு மற்றும் எதிர் அணி வீரர்களை மடக்கி பிடிப்பதில் மேம்படுவது அவசியமாகிறது.

    முன்னதாக இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் உள்ள யு மும்பா- ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    மும்பை அணி தொடக்க ஆட்டத்தில் புனேரி பல்தானுடன் 32-32 என்ற கணக்கில் ‘டை’ செய்தது. ஜெய்ப்பூர் அணி முதல் போட்டியில் இன்றுதான் ஆடுகிறது.
    சென்னையில் நேற்று தொடங்கிய புரோ கபடி லீக் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 42-26 என்ற புள்ளி கணக்கில் பாட்னாவை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியது. #ProKabadi #TamilThalaivas #PatnaPirates
    சென்னை:

    6-வது புரோ கபடி ‘லீக்’ போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. இந்தப் போட்டியில் மொத்தம் 12 அணிகள் கலந்து கொள்கின்றன. இவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது.

    ‘ஏ’ பிரிவில் தபாங் டெல்லி, குஜராத் பார்ச்சுன் ஜெய்ன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், யு மும்பா, புனேரி பல்தான், ஜெய்ப்பூர் பிங் பாந்தர்ஸ் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் நடப்பு சாம்பியன் பாட்னா பைரேட்ஸ், தமிழ் தலைவாஸ், உ.பி.யோதா, பெங்களூரு புல்ஸ், தெலுங்கு டைட்டன்ஸ், பெங்கால் வாரியர்ஸ் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.



    புரோ கபடி ‘லீக்’ போட்டியின் முதல் ஆட்டம் சென்னையில் நேற்று இரவு 8 மணிக்கு நடந்தது. இதில் அஜய் தாகூர் தலைமையிலான தமிழ் தலைவாஸ்- பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின.

    சென்னையில் நடைபெற்ற முதல் லீக் போட்டியில் பாட்னா பைரேட்ஸ் அணியை 42 - 26 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி வீழ்த்தியது. அந்த அணியின் கேப்டன் அஜய் தாகூர் அதிகபட்சமாக 14 புள்ளிகளை எடுத்து அணியின் வெற்றிக்கு வழிகோலினார். #Prokabaddi2018
    ×